
அருகாமை இன்பம் தரவில்லை,
நினைவுகள் நிதர்சனமாகவில்லை,
கனவுகள் கைக்கூடவும் இல்லை,
ஆண்டுகள் கடந்த காத்திருப்பு,
அவள் உணர்வுகளை ஊமையாக்கியது,
கற்பனையில் தோன்றி,
கண்ணீரில் கரைந்து போகும்
அவளது காதல் காவியம் இது…

உன் மொழியை அறிய முற்பட்டேன்…
உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…
புரிந்து கொண்டேன்…
உன் மொழிக்கு,
வார்த்தை இல்லை!
சத்தம் இல்லை!
ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!
