இரவின் அழகு!

நிலவைக் கொண்டு விளக்கு செய்து…

மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…

நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…

கண்டேன் இரவின் அழகை!

பூக்களின் மொழி

உன் மொழியை அறிய முற்பட்டேன்…

உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…

புரிந்து கொண்டேன்…

உன் மொழிக்கு,

வார்த்தை இல்லை!

சத்தம் இல்லை!

ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!

நிலா🌕

எரியும் சூரியனின் தீயும் தேனாய் மாறும் நீ வரும் நேரத்தில்!

கரு வானத்தில் புள்ளி வைத்து கோலமிட்டன நட்சத்திரங்கள்!

விளக்கேற்றி ஆனந்தத்தில் ஆரவாரம் செய்தன மின்மினி பூச்சிகள்!

உன் வருகையை தம்பட்டம் அடித்தது ஆந்தையின் அலறல்!

மயில் தோகை போன்ற மாலை தென்றல் உன்னை வரவேற்க உற்சாகமாக காத்துக் கொண்டு இருக்கிறது!