இரவின் அழகு!

நிலவைக் கொண்டு விளக்கு செய்து…

மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…

நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…

கண்டேன் இரவின் அழகை!

இயற்கையில் பிரியா வரம் பெற்றவை✨

காற்றில் இணைந்த இசை!

மண்ணோடு மறைந்த மழை!

நாவோடு சேர்ந்த சுவை!

இரவோடு இணைந்த இருள்!

முகிலோடு கலந்த காற்று!

வானவில்லோடு பிணைந்த வண்ணம்!

உயிரில் கரைந்த மூச்சு காற்று!