இயற்கையில் பிரியா வரம் பெற்றவை✨

காற்றில் இணைந்த இசை!

மண்ணோடு மறைந்த மழை!

நாவோடு சேர்ந்த சுவை!

இரவோடு இணைந்த இருள்!

முகிலோடு கலந்த காற்று!

வானவில்லோடு பிணைந்த வண்ணம்!

உயிரில் கரைந்த மூச்சு காற்று!

நேரம்⏳🕛

அறிமுகமான அதே நொடியில் அந்நியனாய் பிரிந்து சென்றாய்…

இணைந்த தருணத்தில் இணையா வரத்தை கொடுத்து சென்றாய்…

தொடர்பில்லாத தோழன்!

எதிர்ப்பில்லாத எதிரி!

உறவாடாத உறவு!